• Sep 26 2023

ப்ரியாவைத் தேடி வந்த ஜீவா... விவாகரத்துப் பத்திரத்தைக் கிழித்துப் போட்ட ப்ரியா... சூப்பரான 'Eeramaana Rojaave' Promo Video..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர் ஈரமான ரோஜாவே. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலானது அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பை நாளுக்கு நாள் தூண்டிய வண்ணம் தான் இருக்கின்றது.


இந்நிலையில் இன்றைய நாளுக்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. அதில் ஜீவா ஒருவரிடம் "என் மனசு எந்தளவிற்கு ப்ரியாவை விரும்புது என்பதை நான் இப்ப பீல் பண்ணுறேன் சார், நான் ப்ரியாவை பார்க்கணும், என்னால ப்ரியாவை பார்க்க முடியாமல் இருக்க முடியாது" எனக் கூறி கண் கலங்குகின்றார்.


ஜீவா பேசுவதைக் கேட்டுக்கொண்டு நின்ற ப்ரியா ஜீவாவிற்கு அருகில் சென்று "நீங்க துபாய்க்கு கிளம்பி வந்ததற்கு அப்புறம் என்னால இங்க இருக்க முடியல, நீங்க வீட்டு வாசலைத் தாண்டியதும் என் மனசு உங்களைத் தேட ஆரம்பிச்சிடிச்சு, நீங்க இப்போ எனக்கானவராக மாற ஆரம்பிச்சிட்டீங்க என்பதை நான் முழுசாக நம்புறேன், இனிமேல் என்னையும் உங்களையும் யாராலும் பிரிக்க முடியாது" எனக்கூறி விவாகரத்துப் பத்திரத்தைக் கிழித்துப் போடுகின்றார். இவ்வாறாக இந்தப் ப்ரோமோ வீடியோ வெளியாகி இருக்கின்றது. 


Advertisement

Advertisement

Advertisement