கனா காணும் காலங்கள் சீரியல் புதுப்பொலிவுடன் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாம்-செம குஷியில் ரசிகர்கள்

513

தமிழ்த் தொலைக்காட்சிகளில் பிரபல்யமான தொலைக்காட்சியாக இருப்பது விஜய்த் தொலைக்காட்சியாகும். இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்கள் என்பன சூப்பர் ஹிட்டானவை. அந்த வகையில் இதில் செம ஹிட்டாக ஓடி முடிந்த சீரியல் தான் கனா காணும் காலங்கள்.

இது விஜய் டிவியின் ப்ளாக் பஸ்டர் சீரியல் என்று கூட கூறலாம்.இதில் இதுவரை பள்ளி பருவத்தில் இரண்டு சீசன்களும், கல்லூரி பருவத்தில் இரண்டு சீசன்களும் ஒளிபரப்பாகியுள்ளது.அத்தோடு இதற்கு என்றே ஏராளமான இளம் ரசிகர்கள் இருக்கின்றனர் என்பதும் முக்கியமாகும்.

மேலும் சமீபத்தில் கூட கனா காணும் காலங்கள் ரீ யூனியன் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்றதை பார்த்தோம்.இந் நிகழ்வுக்கு இச் சீரியல் நட்சத்திரங்கள் வந்திருந்ததும் தெரிந்ததே. இந்நிலையில், கனா காணும் காலங்கள் சீரியல் மீண்டும் புதிய சீசன் மூலம் என்ட்ரி கொடுக்கவுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு இந்த தகவல் கனா காணும் காலங்கள் சீரியலின் ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.அத்தோடு இந்த சீரியல் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் ஆவலாக உள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும்.