• Apr 01 2023

விவேகம் படத்தை மட்டும் மகனுக்கு காட்டீடாதீங்க- காஜல் அகர்வாலை கழுவி ஊற்றிய ப்ளூ சட்டை மாறன்

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  விஜய், அஜித், சூர்யா, தனுஷ், கார்த்தி, விஷால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து பிரபல்யமானவர் தான் காஜல் அகர்வால். இவரது நடிப்பில் இறுதியாக ஹே சினாமிகா' படம் வெளியானது.  பிசியாக நடித்து கொண்டிருந்த போதே திருமணணம் முடித்து ஒரு ஆண் குழந்தையையும் பெற்றுள்ளார்.

பின்னர் மீண்டும் தொடர்ச்சியாக படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் காஜல் அகர்வால்.இந்நிலையில் அண்மையில் ஊடகம் ஒன்றில் பேசிய காஜல் அகர்வால் தன்னுடைய மகனுக்கு காட்டவுள்ள முதல் படம் குறித்து பேசினார். அதில் 8 வயது வரை மகனுக்கு எந்த படமும் காட்டப்போவதில்லை என தெரிவித்த அவர், அதன் பிறகு துப்பாக்கி படத்தை முதலில் போட்டு காண்பிப்பேன் என தெரிவித்துள்ளார்.


கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான 'துப்பாக்கி' படத்தில் விஜய் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய இந்தப்படம் அதிரிபுதிரியான வெற்றியை சுவைத்தது. இந்நிலையில் காஜல் அகர்வால் தன்னுடைய மகனுக்கு முதலில் 'துப்பாக்கி' படத்தை காட்டுவேன் என கூறியது தொடர்பாக பல மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகின. 


அதில் தப்பித்தவறி கூட விவேகம் படத்தை காட்டிடாதீங்க மேடம் என்ற மீம்ஸ் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவியது.இதனை ப்ளூ சட்டை மாறன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement