• Feb 04 2023

பருப்புப் பஞ்சாயத்து என்று சொல்லாதீங்க அசீம்... கோபத்தில் பொங்கி எழுந்த விக்ரமன்.. வெளியானது ப்ரோமோ..!

Listen News!
Prema / 1 month ago
image

Advertisement

Listen News!

தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றான விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 6 பிரபலமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் என்றைக்குமே பரபரப்பிற்கு பஞ்சம் இருப்பதில்லை. 

அதேபோல் பிக்பாஸ் வித்தியாசமான பல டாஸ்க்குகளைக் கொடுத்து நிகழ்ச்சியை மென்மேலும் விறுவிறுப்பாக்கிய வண்ணமே இருக்கின்றார். இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய மஇரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.


அதில் முதலாவது ப்ரோமோவில் இடம்பெற்ற சண்டையின் தொடர்ச்சியாக அசீம் மற்றும் விக்ரமனின் வாக்குவாதமே இடம்பெறுகின்றது. அந்தவகையில் "விளையாட்டு என்பது விளையாட்டு தான், அதற்காக ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கையை கொச்சைப்படுத்துவதோ, அவமானப்படுத்துவதோ கூடாது" என அசீமைக் கண்டிக்கின்றார்.

அதுமட்டுமல்லாது "பருப்புப் பஞ்சாயத்து என்று சொல்லாதீங்க, இது உங்களுக்குரிய இறுதி எச்சரிக்கை" எனவும் கோபத்தில் கூறுகின்றார். அதற்கு அசீமும் "எனக்கும் அவருக்கும் இடையிலான பிரச்சினை முடிஞ்சுது, நீங்க எதற்கு இடையில வாறீங்க" எனக் கேட்டு கத்துகின்றார். இவ்வாறாக இன்றைய ப்ரோமோ சண்டையும் சச்சரவுமாக வெளிவந்திருக்கின்றது.


Advertisement

Advertisement

Advertisement