• Apr 20 2024

ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ‘கண்ணை நம்பாதே’ படக்குழுவினர்!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் மு.மாறன் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் 'கண்ணை நம்பாதே'. சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி உள்ள இப்படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். 


மேலும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது சதீஷ், பூமிகா, மஹிமா நம்பியார், வித்யா பிரதீப், அஜ்மல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அத்தோடு வி.என்.ரஞ்சித் குமார் தயாரித்திருக்கும் இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருக்கிறார். 


இந்நிலையில் இப்படத்தின் உடைய டிரைலர் ஆனது சில தினங்களுக்கு முன்பு வெளியாகி இணையத்தில் வைரலாகி இருந்தது. இதனையடுத்து 'கண்ணை நம்பாதே' திரைப்படத்தின் மற்றுமோர் புதிய அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது. 


அதாவது இப்படத்தின் முதல் பாடலான 'குருகுரு' பாடல் நாளை வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை அறிந்த ரசிகர்கள் அப்பாடலை எதிர்பார்த்து மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement