• Sep 30 2023

இப்படி Cheapஆக நடந்து கொள்ளக் கூடாது- ரசிகரின் கேள்விக்கு பதிலடி கொடுத்த shah-rukh-khan-ஜவான் படத்துக்கு Free Ticket தருவீங்களா?

stella / 3 weeks ago

Advertisement

Listen News!

பிரபல பாலிவூட் நடிகரான ஷாருக்கான், இயக்குநர் அட்லி இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் ஜவான். இப்படத்தில் இவருடன்  விஜய் சேதுபதி,  நயன்தாரா, யோகி பாபு, தீபிகா படுகோனே, ப்ரியாமணி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளன. அத்தோடு இப்படத்தை ஷாருக்கானின் மனைவி தயாரித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் பிரமாண்டமாக நடந்ததோடு இதில் பிரபலங்கள் பேசிய விடயங்களும் வைரலாகின. அத்தோடு இப்படத்தின் ட்ரெய்லரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.இப்படம் செம்டெம்பர் மாதம் 7ம் தேதி வெளியாகவுள்ளது.


இதனால் இப்படத்தின் ரிக்கெட் புக்கிங் ஆரம்பித்து விட்டன.இந்நிலையில் ட்விட்டர் தளத்தில் ஒரு ரசிகர் தனது பெண் தோழிக்கு ஜவான் திரைப்பட டிக்கெட் இலவசமாக கிடைக்குமா? என்று ஷாருக்கானிடம் கேட்க, ரொமான்ஸ் செய்யும்பொழுது இப்படி Cheapஆக நடந்து கொள்ளக் கூடாது, ஆகவே டிக்கெட்டுகளை பெற்று உங்களுடைய பெண் தோழியை அழைத்து சென்று படத்தை பார்த்து ரசியுங்கள் என்று நெத்தியடி பதில் ஒன்றை கூறியுள்ளார் .


மேலும் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட ஷாருக்கான், அனிரூத் அவர்களை அவர் வெகுவாக பாராட்டினார். அரங்கிற்குள் பாடிக்கொண்டே அனிரூத் உள்ளே நுழைய, அவரை கட்டித் தழுவி அவருடன் மேடையில் ஏறி நடனமாடி மகிழ்ந்தார் ஷாருக்கான் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement