• Dec 01 2022

ஆணவம் வேண்டாம் தனலட்சுமி... நல்லதில்லை..கண்டிக்கும் நெட்டிசன்கள்

Listen News!
Aishu / 4 weeks ago
image
Listen News!

பிக் பாஸ் போட்டியின் ஆரம்பத்தில் முதல் வாரம் ஜி பி முத்துவுடன் தேவையில்லாமல் மோதி பெயரை கெடுத்துக் கொண்டார் தனலட்சுமி.அதன் பின்னர் தனலட்சுமி சற்று தன்னுடைய நிலையை உணர்ந்து டீம்மேட்ஸ் உடன் ஒத்துப் போக ஆரம்பித்தார்.பின் அசல் கோலாருடன் தனலட்சுமி மோதியதும், அசீமுடன் மோதியதும் அவருக்கு நல்ல பெயர் வாங்கித்தர, அதை கெடுத்துக் கொள்ளும் விதத்தில் தற்போது ஆணவத்துடன் நடந்து வருகின்றார்.

பிக் பாஸ் போட்டியின் தொடக்க வாரத்தில் வெள்ளந்தியாக பேசும் ஜி பி முத்து தன் வயதுக்கு குறைவான பெண் போட்டியாளர்களை நீ வா போ என்று சாதாரணமாக பேச, தனலட்சுமி என்னை எப்படி நீ வா போ என்று கூறலாம் என்று அவருடன் கடுமையாக மோதினார். 

அத்தோடு ஆயிஷா உள்ளிட்ட மற்றவர்களுடன் சேர்ந்து கொண்டு குழுவாக இயங்கி ஷிவினுக்கு எதிராக இயங்கி கெட்டப்பெயரை சம்பாதித்துக் கொண்டார். எனினும் இதை அடுத்து பலமாக விமர்சிக்கப்பட்டவர் தனது நிலையை அடுத்தடுத்த வாரங்களில் லேசாக மாற்றிக் கொண்டார் ஆயிஷா போன்றவர்களிடமிருந்து விலகினார்.இதன் பின்னர் அவருக்கு அடுத்த வாரங்களில் அமுதவாணன் போன்றவுடன் ஏற்பட்ட நட்பு அவரை நிதானமாக்கியது. அத்தோடு அமுதவாணன், விக்ரம், ஷிவின் போன்றவர்களுடன் சேர்ந்து அசீம் போன்றவருடைய தவறுகளை கட்டி கேட்டதாலும் பொம்மை டாஸ்க்கில் தனலட்சுமி துணிச்சலாக நின்றதும் தனலட்சுமி மீது குறி வைத்து அசீம் நடத்திய தாக்குதல் மற்றும் அவரை அவமரியாதை செய்தது தனலட்சுமிக்கு பெரியளவில் பெயரை வாங்கி கொடுத்தது. இதனால் இந்த வாரம் கமல் அவரை வெகுவாக பாராட்டினார் சமூக வலைதளங்களிலும் தனலட்சுமிக்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைத்தது.

தனலட்சுமி பொதுவாக எடுத்தெறிந்து பேசும் குணம் உள்ளவர். அத்தோடு அசீமை எதிர்த்து பேசுவதாலும் அவர் எதிர்த்து பேசப்பட்ட நபர் கடுமையாக கண்டிக்கப்பட்டவர் என்பதாலும் சமூக வலைதளங்களிலும் பொதுமக்களாலும் அவர் செய்தது சரியாகப்பட்டது. ஆனால் இந்த வாரம் அவருடைய இயல்பான நிலை வெளிப்படத் ஆரம்பித்துள்ளது. தன்னிடம் பேசுபவர்கள் ஏதாவது அறிவுரை சொன்னால் நான் அப்படித்தான் உங்க வேலையை பாருங்க, நீங்க யாரு எனக்கு புத்தி சொல்வது என்கிற பாணியில் பேச ஆரம்பித்துள்ளார்.தனலட்சுமி எல்லோரிடமும் நெருங்கி பழகுவார். கண்டபடி பேசுவார் கண்டபடி விளையாடுவார் ஆனால் அவரிடம் யாராவது வா போ என்று பேசினாலோ அதே நெருக்கத்தை பயன்படுத்தி ஏதாவது வார்த்தைகள் பேசினாலும் எப்படி பேசலாம் என்று முகத்துக்கு நேரே அவமானப்படுத்தும் செயலில் இறங்குவார்.

ராபர்ட் மாஸ்டர் கடந்த இரண்டு நாட்களாக தனலட்சுமி உடன் இயல்பாக பழகியதால் இப்போ தூங்காதே நாய் குரைக்கும் என்று சொன்னதை என்னை எப்படி நாய் என்று சொல்லலாம், என்னை எப்படி நீ வா போ என்று சொல்லலாம் என்று மல்லு கட்டி நின்றார். மேலும் ஒரு கட்டத்தில் ராபர்ட் மாஸ்டர் நீ ரெண்டு நாளாக நன்றாக என்னுடன் பழகியதால் அப்படி பேசி விட்டேன் இனிமேல் பேச மாட்டேன் என்று அவமானத்துடன் அந்த இடத்தை விட்டு அகன்றார்.எனினும்  அதேபோல் நேற்று டிவி டிபேட் டாஸ்க்கில் அசீம் உடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஷிவினுடன் நின்று அவருடன் விதண்டாவாதம் செய்தார். நீங்கள் எப்படி உங்களுடைய சமூகத்தில் இருந்து வந்ததை பற்றி சொல்லலாம் என்றெல்லாம் வாதம் செய்தார் ஒரு கட்டத்தில் வாதத்தை விட்டு அவருடைய சத்தமே அதிகமாக இருந்தது.

மேலும்  இந்த வாதம் நள்ளிரவிலும் தொடர்ந்தது. அசீம், தனலட்சுமி போட்டுக் கொண்ட சண்டையால் மற்றவர்கள் தூங்க முடியாமல் எழுந்து வந்து இருவரையும் சமாதானப்படுத்த வேண்டியதாகிப் போய்விட்டது. இது கொஞ்சம் கொஞ்சமாக தனலட்சுமி மீதான மரியாதையை குறைத்து வருகிறது.மேலும்  நியாயமான விஷயங்களுக்கு குரல் கொடுக்கும் அமுதவாணன் விக்ரம் போன்றோர் ஸ்கோர் செய்வதும், தனலட்சுமி அதே பாணியில் செல்லாமல் தான் தோன்றித்தனமாக நடப்பதும் அவருக்கு கெட்ட பெயரை வாங்கி தரும் என்பதை உணர மறுக்கிறார். இப்படியே இவர் எல்லோரையும் பகைத்துக் கொண்டு ஏதாவது பேசினால் விரைவில் அவர் மீதான மதிப்பு குறையும். அத்தோடு தனலட்சுமி அனுபவமற்றவர் என்பதை மீண்டும் நிரூபித்து வருகிறார். கூடிய விரைவில் இதற்கான விலையை அவர் அந்த வீட்டில் கொடுக்க நேரிடும்.