• Mar 28 2023

சூப்பர் சிங்கர் செந்தில் ராஜலட்சுமிக்கு இவ்வளவு பெரிய பிள்ளைகள் இருக்கின்றனரா?- முதன் முறையாக வெளியாகிய போட்டோ

stella / 1 month ago

Advertisement

Listen News!


விஜய் டிவி-யின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு, தங்கள் முழு திறமையை வெளிப்படுத்திய கிராமிய பாடகர்கள் செந்தில் கணேஷ் - ராஜலட்சுமி ஜோடியை ரசிகர்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது.


கிராமிய நாட்டுப்புற பாடகர்களான இவர்களின் பயணம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு பின்பு அடுத்தக்கட்டமான வெள்ளித்திரைக்கு சென்றது.செந்தில் - ராஜலட்சுமி இணைந்து பாடிய சின்ன மச்சான் பாடல் பட்டி தொட்டியெங்கும் வைரலானது.


தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் தொடங்கி அதில் அடிக்கடி வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.கடந்தாண்டு தங்கள் சொந்த ஊரான புதுக்கோட்டையில் பிரமாண்டமாக வீட்டு கட்டியதோடு, குழந்தைகளின் காதணி விழாவையும் நடத்தியிருந்தனர்.


இந்நிலையில் தற்போது குழந்தைகளோடு இருக்கும் தங்கள் குடும்பப் படத்தை முதன் முறையாக வெளியிட்டிருக்கிறார் ராஜலட்சுமி.அந்தப் படத்துக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள்.






Advertisement

Advertisement

Advertisement