இன்னும் 5 வருடங்களுக்கு செக்கப்புக்கே வரவேண்டாம் என நடிகர் ரஜினியிடம் கூறிய மருத்துவர்கள்-எதனால் தெரியுமா?

203

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்துத் திரைப்படங்களும் சூப்பர் ஹிட் வெற்றி பெறுவதோடு வசூலில் அள்ளிக்குவித்து வருவதும் தெரிந்ததே. மேலும் ரஜினி தற்பொழுது அண்ணாத்த என்னும் படத்தில் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் நடிகர் ரஜினி சில ஆண்டுகளுக்கு முன்னர் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என்பது யாவரும் அறிந்ததே. அதனைத் தொடர்ந்து பரபரப்பாக படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் அவர் அமெரிக்காவுக்கு சென்று செக்கப் செய்துகொண்டு சென்னை திரும்பியுள்ளார்.

இப்போது அதே சுறுசுறுப்போடு படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். சமீபத்தில் அண்ணாத்த பட டப்பிங்கில் கலந்து கொண்டார் என்பதும் தெரிந்ததே,இந்நிலையில் மருத்துவர்கள் ரஜினிக்கு சொன்ன அறிவுரை என்ன என்பது வெளியாகியுள்ளது.

அதாவது ரஜினியின் உடல்நிலை மிகவும் நல்ல நிலையில் இருப்பதாகக் கூறிய மருத்துவர்கள் இன்னும் 5 வருடங்களுக்கு செக்கப்புக்கே வரவேண்டாம் எனக் கூறியுள்ளனராம். அதனால் அடுத்த ஐந்து வருடங்களுக்கு ரஜினி வரிசையாக படங்களில் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.