• Apr 01 2023

பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட டாக்டர் பட்டம் போலியானதா? விழா ஏற்பாட்டாளர் தலைமறைவு- போலீஸார் வலைவீச்சு

Prema / 4 weeks ago

Advertisement

Listen News!

கடந்த 26-ஆம் திகதி அண்ணா பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டங்கள் தொடர்பான சர்ச்சைக் கருத்துக்கள் தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி இருக்கின்றன. அதாவது இந்த நிகழ்ச்சியானது சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை ஆணையம் என்ற அமைப்பின் கீழ் நிகழ்த்தப்பட்டது. 

இதில் நடிகர் வடிவேலு, சாண்டி மாஸ்டர், ஈரோடு மகேஷ் உட்பட 50 இற்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டிருக்கின்றது. இவ்வாறு வழங்கப்பட்டவை அனைத்தும் போலியானவை என ஒரு தகவல் பரவியது. இதனையடுத்து அண்ணா பல்கலைக்கழகம் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கின்றது.


இதனைத் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியின் தலைமை ஏற்பாட்டாளர்களாக கடமை ஆற்றிய ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி வள்ளிநாயகம் "இந்த நிகழ்ச்சியை நடத்துவதற்காக என்னுடைய கையெழுத்து மற்றும் லேட்டர் என்பவற்றை தவறாக பயன்படுத்தி அண்ணா பல்கலைக்கழகத்தில் அனுமதி வாங்கி இருக்கின்றார்கள்" எனக் கூறி தானும் காவல் நிலையத்தில் தனியாக ஒரு புகாரினை அளித்து இருக்கின்றார்.


மேலும் அண்ணா பல்கலைக்கழகம் அளித்த புகாரின் பேரில் நேற்றைய தினம் இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மீது ஏமாற்றுதல், மோசடி செய்தல் உட்பட 7பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. இவ்வாறு வழக்குப் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து விழா நடத்திய அமைப்பினுடைய இயக்குநர் ஹரீஷின் மொபைல் போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதாகவும், இவர் தற்போது எங்கே இருக்கின்றார் என்று தெரியவில்லை எனவும் தகவல் வெளியாகி இருக்கின்றது. 

இதனையடுத்து தலைமறைவாகி உள்ள இவரைக் கண்டுபிடிக்கும் நோக்கில் போலீஸார் தொடர்ந்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.      

Advertisement

Advertisement

Advertisement