• Mar 28 2024

மயில்சாமி சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டது ஏன் தெரியுமா?- இறக்க முதல் அவரே கூறிய உண்மைக் காரணம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இன்று நகைச்சுவை நடிகர் மயில்சாமி மறைந்தது திரைத்துறையினரையும் தாண்டி பொதுமக்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. தன் நகைச்சுவை திறனால் ஒருபக்கம் ரசிகர்களை ஈர்த்தாலும் அவரின் குணத்தால் பலரை தன் வசப்படுத்தியுள்ளார் மயில்சாமி.உதவி என்று தன்னை நாடிவரும் மக்களுக்கு ஓடோடி சென்று உதவி வந்தார்.

 சிறு வயதிலிருந்தே எம். ஜி. அவர்களின் தீவிர ரசிகராக இருந்து வருகின்றார்.இவரை எம்.ஜி.ஆரின் ரசிகர் என்று சொல்வதை விட பக்தர் என்றே சொல்லலாம்.அந்த அளவிற்கு எம்.ஜி.ஆர் அவர்களை நேசிக்கும் மயில்சாமி அவரை பார்த்து தான் வள்ளல் குணத்தை வளர்த்துள்ளார். பல மேடைகளில் எம்.ஜி.ஆர் பற்றி பேசும்போது மயில்சாமியின் கண்கள் அவருக்கு தெரியாமலே கலங்கும். 


அவ்வாறு எம்.ஜி.ஆர் மீது பற்று கொண்ட மயில்சாமி அதன் காரணமாகவே அதிமுக கட்சியில் இணைந்தார்.ஜெயலலிதா அவர்களின் மறைவுவரை அக்கட்சியில் இருந்த மயில்சாமி அதன் பின் அக்கட்சியிலிருந்து விலகினார். இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டார் .

இதையடுத்து தான் சுயட்சையாக போட்டியிட்டது ஏன் என்ற காரணத்தை கூறிய மயில்சாமி, தன்னால் எம்.ஜி.ஆருக்கு பிறகு யாரையும் தலைவராக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அவ்வாறு ஏற்றுக்கொள்ள என் மனம் மறுக்கின்றது. அதன் காரணமாகவே தான் சுயேட்சையாக விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டேன் என்றார் மயில்சாமி.


என்னதான் தேர்தலில் தோல்வியடைந்தாலும் விருகம்பாக்கம் தொகுதியை சார்ந்த மக்களுக்கு தன்னால் முடிந்த உதவியை செய்து வந்தார். இவரின் இறப்பு அனைவருக்குமே பேரதிர்ச்சியாகத் தான் உள்ளதும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement