• Apr 20 2024

கார்த்தியின் ஜப்பான் டைட்டில் ஏன் வந்தது தெரியுமா? வெளியானது தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் கார்த்தியின் விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுத்து வருகின்றது.மேலும் இந்தப் படங்களை தொடர்ந்து தற்போது ஜப்பான் என்ற படத்தில் தற்போது கார்த்தி நடித்து வருகிறார். படத்தை பிரபல இயக்குநர் ராஜு முருகன் இயக்கி வருகிறார்.எனினும் இந்தப் படத்தின் பூஜை கடந்த நவம்பர் 8ம் தேதி போடப்பட்டு தற்போது சூட்டிங் நடைபெற்று வருகிறது. படத்தில் அனு இம்மானுவேல் கார்த்திக்கு ஜோடியாகியுள்ளார்.

நடிகர் கார்த்தியின் அடுத்தடுத்த படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்துள்ளன. விருமன், பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் என ஹாட்ரிக் வெற்றிகளை கார்த்தி கொடுத்துள்ளார். இந்தப் படங்களை தொடர்ந்து சிறிதும் ஓய்வின்றி அடுத்தப் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். அத்தோடு கடந்த நவம்பர் 8ம் தேதி ராஜு முருகன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ஜப்பான் என்ற படத்தின் பூஜை போடப்பட்டுள்ளது.

மேலும் இந்தப் படத்தில் அனு இம்மானுவேல் கார்த்தியின் ஜோடியாக நடித்து வருகின்றார். ஜிவி பிரகாஷ் இசையமைத்துவரும் ஜப்பான் படத்தின் சூட்டிங் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கார்த்தியின் நடிப்பில் 25வது படமாக உருவாகிவரும் ஜப்பான் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது.எனினும் இந்த நிறுவனம் சகுனி தொடங்கி சுல்தான் வரை கார்த்தியின் 5 படங்களை இதுவரை தயாரித்துள்ளது.

இதனிடையே இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு விரைவில் முதல்கட்ட சூட்டிங் நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல படத்தில் கார்த்தி இரண்டு வேடங்களில் நடிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. எனினும் இதனிடையே ஜோக்கர் போன்ற சீரியசான கதைக்களங்களை கொடுத்த ராஜு முருகன் இந்தப் படத்தில் கார்த்தியை வைத்து முழுநீள காமெடி படத்தை இயக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அத்தோடு முன்னதாக பொன்னியின் செல்வன் படத்திலும் கார்த்தி நகைச்சுவை இழையோடிய கேரக்டரில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது ஜப்பான் படத்திலும் காமெடி கலாட்டா செய்யவுள்ளதாக சொல்லப்பட்டது. காமெடி கேரக்டர்களை இயல்பாக செய்யும் கார்த்தி, இந்தக் கேரக்டரையும் சிறப்பாக செய்து ரசிகர்களுக்கு நல்ல காமெடி அனுபவத்தை கொடுப்பாரென்று எதிர்பார்க்கலாம்.



இதனிடையே இந்தப் படத்தின் டைட்டில் ஜப்பான் என்று அமைய காரணம், படத்தின் கார்த்தியின் கேரக்டர் பெயர் ஜப்பான். அத்தோடு இந்தப் படத்தில் பிரபல ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் ஜப்பான் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தத்தில் கார்த்தியை கலாட்டா கார்த்தியாக பார்க்க அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள் என்பதில் சந்தேகமில்லை.

கார்த்தியின் அடுத்தடுத்தப் படங்கள் வித்தியாசமான ஜானர்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. இந்தப் படங்கள் ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ள நிலையில் அடுத்ததாக உருவாகும் ஜப்பான் படமும் சிறப்பான வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கைதி 2 படத்திலும் இணையவுள்ளார் கார்த்தி. இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.




Advertisement

Advertisement

Advertisement