• Mar 28 2023

''பில்லா'' படத்தில் நயன்தாராவுக்கு பதில் முதலில் நடிக்கவிருந்த நடிகை யார் தெரியுமா?

Jo / 2 weeks ago

Advertisement

Listen News!

இயக்குநர் விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடிப்பில் கடந்த 2007-ஆம் ஆண்டு வெளியான அதிரடியான கேங்ஸ்டர் திரைப்படம் “பில்லா”. இந்த திரைப்படம் அஜித்தின் சினிமா கேரியரில் மறக்க முடியாத ஒரு திரைப்படம் என்று கூறலாம். அந்த அளவிற்கு படத்தில் மிகவும் ஸ்டைலான ஸ்டார் ஆக அஜித் நடித்திருப்பார்.

இந்த திரைபடத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருப்பார். படத்தில் அஜித் எந்த அளவிற்கு ஒரு ஸ்டைலான ஹீரோவாக நடித்திருப்பாரோ, அதைப்போலவே நயன்தாராவும் தனது ஸ்டைலான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இந்த நிலையில், பில்லா திரைப்படத்தில் நயன்தாராவுக்கு பதிலாக முதலில் நடிக்க விருந்தவர் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது. அதன்படி, இப்படத்தில் நயன்தாரா நடித்த ஷாஷா கதாபாத்திரத்தில் முதலில் ஒப்பந்தமானவர் நடிகை அசின். ஆனால் அப்போது அவருக்கு தேதிகள் ஒதுக்குவதில் ஏற்பட்ட சிக்கலால் அந்த ரோல் நயன்தாராவுக்கு கிடைத்தது.

இது தொடர்பாக அசினை வைத்து படக்குழுவினர் எடுத்த போட்டோஷூட் தற்போது வைரலாகி வருகிறது. 


Advertisement

Advertisement

Advertisement