• Mar 19 2024

இந்த சிறுவயதுக் குழந்தை யார் தெரியுமா... இவர் வேறு யாருமில்லை சூர்யா பட நாயகி தான்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பாலிவுட் சினிமாவில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான 'மெய்னி தில் துஜ்கோ தியா' என்ற படத்தின் மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானவர் சமீரா ரெட்டி. அதுமட்டுமல்லாது இவர் இயக்குநர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான 'வாரணம் ஆயிரம்' என்ற படத்திலும் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிலும் அறிமுகமானார்.


இவ்வாறு தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பல மொழிப் படங்களிலும் பிசியாக நடித்து வந்த சமீரா ரெட்டி, கடந்த 2014-ஆம் ஆண்டு அக்‌ஷய் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார். அதன் பின்பு சினிமாவிலிருந்து ஒதுங்கி இருக்கின்ற சமீராவுக்கு தற்போது ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். 


சமீரா நடிப்பதில் இருந்து விலகி இருந்தாலும் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உள்ளது.


அந்தவகையில் நடிகர், நடிகைகளின் அன்ஸீன் புகைப்படங்களை பார்த்தால் விட்டு வைக்காத நம்ம ரசிகர்கள் இவரின் புகைப்படத்தை மட்டும் விட்டும் வைப்பார்களா..?


ஆம் அந்தப் புகைப்படத்தில் இருக்கும் சிறுவயதுக் குழந்தை வேறு யாருமில்லை சமீரா ரெட்டி தான். அவரின் புகைப்படத்தை தான் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement