• Apr 19 2024

இந்த புகைப்படத்தில் இருக்கும் சூப்பர் சிங்கர் பிரபலங்கள் யார்ன்னு தெரிகிறதா? முடிஞ்சா கண்டுபிடியுங்க பார்க்கலாம்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

சமீப காலமாகவே சின்னத்திரையில் ஒளிப்பரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் எல்லாம் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. 

அதிலும், விஜய் டிவியில் எத்தனையோ நிகழ்ச்சிகள் வந்தாலும் ஆணிவேராக மக்கள் மத்தியில் என்றென்றும் நீங்கா இடம் பிடித்திருக்கும் நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர்.

பல ஆண்டு காலமாக மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி. இது ஜூனியர், சீனியர் என்று இரு பிரிவில் நிகழ்ச்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் ஏகப்பட்ட பேருக்கு வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. மேலும், இந்த நிகழ்ச்சி தான் வெள்ளித்திரைக்கு பாடகர்களை அறிமுகப்படுத்தும் பாலம் என்று சொல்லலாம். அதுமட்டுமில்லாமல் இந்த நிகழ்ச்சிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லாமல் உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறர்கள்.

மேலும், சூப்பர் சிங்கர் சீனியர்ஸ் நிகழ்ச்சியை விட மழைலை குரல்கள் ஒலிக்கும் சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் நிகழ்ச்சிக்கு தான் ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்ப்பு பெற்று இருக்கிறது. கடந்த ஆண்டு சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் 8 நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பல குழந்தைகள் பங்கேற்றிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் மா கா பா ஆனந்த் மற்றும் பிரியங்கா தேஷ்பாண்டே தொகுத்து வழங்கி இருந்தார்கள். சமீபத்தில் தான் இந்த சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நிறைவு பெற்று இருந்தது.

தற்போது புத்தம் புதிதாக சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. அதற்கான ப்ரோமோக்கள் எல்லாம் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. இதனால் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சூப்பர் சிங்கர் பிரபலங்களின் சிறு வயது புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, அந்த புகைப்படத்தில் இருப்பவர்கள் வேறு யாரும் இல்லை நித்யஸ்ரீ, பிரியங்கா, ஸ்ரீ நிஷா. இவர்களின் சிறுவயது புகைப்படம் தான் தற்போது வைரலாகி இருக்கிறது. நித்யஸ்ரீ, பிரியங்கா, ஸ்ரீநிஷா இவர்கள் மூவருமே தற்போது வெள்ளி திரையில் பாடகிகளாக திகழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.


Advertisement

Advertisement

Advertisement