தமிழ் சின்னத்திரையில் முக்கியமான தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓகெ் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6.இந்த நிகழ்ச்சியானது பரபரப்புக்கு குறையில்லாமலும் பெரும் சர்ச்சைகள் மத்தியிலும் ஒளிபரப்பாகி வருகின்றது.
இது விஜய் டிவியில் எப்பிஷோட்டாக மட்டுமல்லாது ஹாட்ஸ்டாரிலும் 24 மணி நேரமும் இந்த ஷோ ஒளிபரப்பாவதால் ரசிகர்கள் போட்டியாளர்கள் பற்றி பல விஷயங்களை தெரிந்து கொள்கின்றனர்.
மேலும் கடந்தவாரம் சாந்தி எலிமினேட் ஆன நிலையில் இந்த வாரம் யார் வெளியேறப்போவது என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மனதில் இருந்து வருகிறது.அதன்படி தற்போது மக்கள் வாக்குகள் அடிப்படையில் அசல் கோளாறு தான் பிக் பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டு இருக்கிறார்.
அவர் வீட்டில் நிவாஷினி, குயின்சி உள்ளிட்ட பல பெண்களிடம் தகாத முறையில் தொடும் காட்சிகள் தொடர்ந்து இணையத்தில் வைரல் ஆகி வந்தது. அதனால் தான் அவர் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு மிக்க மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!