• Apr 25 2024

ஜெயம் ரவியின் காதலி யார் தெரியுமா?…கண்டுபிடித்த ரசிகர்கள்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' என்ற சரித்திர நாவலை மையமாக வைத்து உருவாகியுள்ள படமே 'பொன்னியின் செல்வன்'. இப்படத்தினை தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநரான மணிரத்னம் இயக்கியுள்ளார். இதன் முதல் பாகத்தின் டீசர் நேற்றைய தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பினைப் பெற்றிருக்கின்றது.

இந்த டீசரில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பவர்களை சில வினாடிகளும், துணைக் கதாபாத்திரங்களில் நடிப்பவர்களை ஒரு பிரேமிலும் காட்டியிருக்கின்றார்கள். இதனால் ஏனைய கதாபாத்திரங்களில் நடிப்பவர்களின் தோற்றம் எப்படியிருக்கின்றது என்பதனை ரசிகர்கள் டீசரின் வேகத்தை குறைத்து வைத்துப் பார்த்து தெரிந்து கொண்டார்கள்.

அவ்வாறு பார்க்கும் போது பொன்னியின் செல்வனாக நடிக்கும் ஜெயம் ரவியின் காதலி யார் என்பதையும் ரசிகர்கள் தெரிந்து கொண்டார்கள். அதாவது அந்த நாவலின்படி சோழப் பேரரசின் சேனாதிபதியாக இருந்த கொடும்பாளூர் பெரிய வேளார் பூதி விக்கிரம கேசரியின் மகளான வானதி தான் பொன்னியின் செல்வன் அருள்மொழி வர்மனின் காதலி ஆவார்.

இந்த நிலையில் அந்த வானதி கதாபாத்திரத்தில் புதுமுகமான சோபிட்டா துலிபலா நடித்திருக்கின்றார். இவர் ஹிந்தி, தெலுங்கு, மலையாள படங்களில் நடித்திருந்ததோடு 2013-ஆம் ஆண்டில் மிஸ் இந்தியா எர்த் பட்டத்தினையும் வென்றிருக்கின்றார்.

அதுமட்டுமில்லாது சோபிட்டா துலிபலா தான் நடிகை சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவின் தற்போதைய காதலி என சமீபத்தில் கிசுகிசுக்கள் எழுந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் இவர் தற்போது வானதி கதாபாத்திரத்தில் நடித்துள்ளமையையிட்டு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புக் கிளம்பியுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement