• Apr 19 2024

எதிர் நீச்சல் தொடரில் என்ட்ரி கொடுத்து இருக்கும் இந்த 80ஸ் நடிகை யார் தெரியுமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

எதிர்நீச்சல் சீரியலில் மோகன் பட நடிகை நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியலில் எதிர்நீச்சல் சீரியல் மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. அப்பா மற்றும் மகள் இருவருக்கும் இடையில் நடக்கும் பாசப் போராட்டத்தையும், பெண்களுக்கான உரிமையையும் மையமாக கொண்ட கதை. 

 பல அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இந்த சீரியலில் கெஸ்ட் ரோலாக மோகன் பட நடிகை நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

அவர் வேற யாரும் இல்லைங்க, நடிகை ஜெயஸ்ரீ. இவர் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகையாக திகழ்ந்தவர். 1985 ஆம் ஆண்டு மோகன் நடிப்பில் வெளிவந்திருந்த தென்றல் என்னை தொடு என்ற படத்தின் மூலம் தான் இவர் தமிழில் அறிமுகமாகியிருந்தார்.

 

இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

இடையில் சில காலம் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார் . இதனால் இவர் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் இவர் சில படங்களில் நடித்திருந்தார். அதற்குப்பின் இவர் சினிமா வாய்ப்பு கிடைக்காததால் அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். 

இந்நிலையில் நடிகை ஜெயஸ்ரீ மீண்டும் நடிக்க இருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி இருக்கிறது. அதாவது, சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் தான் கெஸ்ட் ரோலாக நடிக்க இருக்கிறார். இதனால் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்..

Advertisement

Advertisement

Advertisement