• Dec 01 2023

'வாரிசு' படத்தில் ரஜினியை காப்பியடித்தாரா விஜய்? மீம் போட்டு கலாய்க்கும் நெட்டிசன்கள்

Jo / 8 months ago

Advertisement

Listen News!

விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி இயக்கத்தில் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘வாரிசு’ .இந்த படத்தை தில் ராஜு தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்திருந்தார். படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா நடித்திருந்தார்.

குடும்ப செண்டிமென்ட் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. வசூல் ரீதியாக படம் இதுவரை உலகம் முழுவதும் 312 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

திரையரங்குகளை தொடர்ந்து படம் சமீபத்தில் ஓடிடியில் வெளியானது. இதனையடுத்து, தற்போது வாரிசு படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சி ஒன்றை ஓடிடி நிறுவனம் அமேசான் ப்ரைம் வெளியிட்டு இருக்கிறது. 


இந்த நிலையில், இந்த காட்சியில் இடம்பெறும் ஒரு ஷாட் ஒன்றில்  ரஜினியை பார்த்து காப்பியடித்து விஜய் நடித்துள்ளார் என்பது போல் மீம் போட்டு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் பலரும்  கலாய்த்து வருகிறார்கள்.




Advertisement

Advertisement

Advertisement