• Apr 17 2024

வாரிசு இசை வெளியீட்டு விழாவுக்கு வந்த விஜய்க்கு ஹேர் ஸ்டைல் பண்ணி விட்ட ஸ்டைலிஸ்ட் யார் தெரியுமா?- வைரலாகும் போட்டோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய், ராஷ்மிகா, பிரபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், ஜெயசுதா, ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, சங்கீதா, சம்யுக்தா, குஷ்பு எனப்பெரிய நட்சத்திர பட்டாளத்தின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் வாரிசு. இப்படத்தினை தெலுங்கு இயக்குநரான வம்சி இயக்கி வருகின்றார்.


அத்தோடு இப்படத்தினை தில் ராஜு என்பவர் தயாரித்து வருகின்றார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவானது கடந்த 24.12.2022 அன்று நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில்  விஜய், ராஷ்மிகா மந்தனா , எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜூ,  இயக்குநர் வம்சி பைடிபள்ளி, இசையமைப்பாளர் தமன், சங்கர் மகாதேவன், டிரம்ஸ் சிவமணி, பிரகாஷ் ராஜ், சரத்குமார், நடிகர் ஷாம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.


இந்த நிகழ்வில் நடிகர் விஜய்யின் ஹேர் ஸ்டைலை பிரபல ஸ்டைலிஸ்ட் ஜெகதீஷ் வடிவமைத்துள்ளார். மேலும் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் உடன் எடுத்த செல்ஃபி புகைப்படத்தையும் ஜெகதீஷ் வெளியிட்டுள்ளார்.


மும்பையை சேர்ந்த ஜெகதீஷ், விஜய் நடித்த பிகில், மாஸ்டர், பீஸ்ட் மற்றும் வாரிசு படங்களில் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக பணிபுரிந்தவர் ஆவார். அத்தோடு இப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement