• Apr 20 2024

சிறுவயதில் ரொம்ப கியூட்டாக இருக்கும் மக்கள் நாயகி நடிகை யார் தெரியுமா?- வி மிஸ்யூ என கவலை தெரிவிக்கும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகலமாக வெள்ளித்திரையில் நடித்து வரும் நடிகைகளைப் போல சின்னத்திரையில் நடித்து வரும் நடிகைகளுக்கென்று தனி ரசிகர் பட்டாளமே காணப்படுகின்றது.அப்படி எத்தனையோ நடிகைகள் இப்போது மக்களிடம் அதிக வரவேற்பு பெற்று வருகிறார்கள்.

விஜய் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை போல் இப்போது சீரியல்களும் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கிறது.அப்படி மிகவும் பிரபலமாக ஓடக் கூடிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த தொடரில் முல்லை என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபல்யமானவராக வந்தவர் தான் சித்ரா.


பிரபல்யமாக வந்து கொண்டிருக்கும் போது தான் திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளப் போவதாகவும் அறிவித்திருந்தார்.அத்தோடு ரசிகர்களோடும் எப்போதும் சமூக வலைத்தளங்களில் உரையாடி வந்த இவர் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வந்தார்.


இருப்பினும் திடீரென சில ஆண்டுகளுக்கு முதல் தற்கொலை செய்து கொண்டார். இவருடைய இறப்புக்கான காரணம் இதுவரை சரியாக இன்னும் தெரியவில்லை. இதற்கான விசாரணைகள் நடந்து வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


அவரது பிறந்தநாள் வர இருக்கும் நிலையில் இன்ஸ்டா பக்கத்தில் உள்ள அவரது ரசிகர்களின் பக்கத்தில் தான் நடிகையின் சிறுவயது புகைப்படங்கள் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.அதைப்பார்த்து ரசிகர்கள் வி மிஸ் யூ சித்து என வருத்தமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement