• Mar 29 2024

பிக்பாஸ் 6இன் டைட்டில் வின்னர் விக்ரம் இல்லையாம்... மக்களால் அதிகம் விரும்பப்பட்ட அந்தப் போட்டியாளர் யார் தெரியுமா..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் 6 தற்போது விறுவிறுப்புக்கும், சண்டைக்கும் பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் இறுதி வாரத்தில் இருக்கும் 5 போட்டியாளர்கள் மற்றும் டைட்டிலை தட்டி தூக்கி செல்லும் போட்டியாளர் யார் என்ற தகவல் ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.


அந்தவகையில் விஜய் டிவியில் கடந்த செப்படம்பர் 9ஆம் தேதி ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில்  20 பேர் கொண்டு ஆரம்பிக்ப்பட்டது. இதில் வையல் கார்டு என்ட்ரியாக மைனா நந்தினி நுழைந்தார். மேலும் இதிலிருந்து முதல் வாரம் சாந்தி மற்றும் ஜிபி முத்து இருவரும் வெளியேறி இருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த வார நாமினேஷனில் அசல், ஷெரினா, மகேஸ்வரி, நிவாஷினி, ராபர்ட் மாஸ்டர் ஆகியோர் அடுத்தடுத்து வெளியேறினார்கள். இந்நிலையில் தற்போதுள்ள போட்டியாளர்களில் இறுதி வாரத்திற்கு செல்லும் டாப் 5 போட்டியாளர்கள் யார் என்பது தெரிய வந்திருக்கிறது.


அதாவது மக்கள் மத்தியில் அதிகம் கவனிக்கப்படும் போட்டியாளர்களாக ஷிவின், அசீம், தனலட்சுமி, அமுதவாணன், கதிர் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இவர்களில் 50 நாட்களை கடந்துள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் மக்களிடம் இருந்து அதிகளவான வரவேற்பை பெற்றுள்ள ஷிவின் டைட்டில் வின்னராக அதிக வாய்ப்புள்ளது எனப் பலரும் கூறி வருகிறார்கள்.


 எனினும் சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம் யார் வெல்ல போகிறார் என்று..

Advertisement

Advertisement

Advertisement