• Apr 25 2024

விருமன் பட இயக்குநருடன் கை கோர்க்கும் ஆர்யா- கதாநாயகி யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில்  கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த குட்டிப்புலி திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் முத்தையா. இதனைத் தொடர்ந்து கார்த்தி நடிப்பில் வெளியாகியிருந்த 'கொம்பன்' திரைப்படத்தை இயக்கி இருந்தார்.

தொடர்ந்து விஷால் நடிப்பில் வெளியான மருது அண்மையில் கார்த்தி நடிப்பில் வெளியாகியிருந்த விருமன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார். இந்நிலையில், முத்தையா நடிகர் ஆர்யாவுடன் புதிய படத்தில் இணைவதாக தகவல்கள் வெளியாகியது.


நடிகர் ஆர்யா, டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை படங்களின் வெற்றியைத் தொடர்ந்து, சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் கேப்டன் என்னும் திரைப்படத்தில் நடித்து இருந்தார். இப்படத்தில் ஆர்யாவுடன் சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஹரீஷ் உத்தமன், காவ்யா ஷெட்டி உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

அடுத்து இவர் முத்தையாவுடன் கை கோர்க்கும் படத்தில் நடிகை சிதி இத்னானி கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்திருக்கின்றன. 


பொதுவாக, முத்தையா இயக்கும் படங்கள் அனைத்திலும், கிராமம் சார்ந்த கதைக் களம் தான் இடம்பெற்றிருக்கும். 'அவன் இவன்' உள்ளிட்ட ஒருசில கிராமத்து பின்னணி கொண்ட படங்களில் நடித்திருக்கும் ஆர்யா, தற்போது முத்தையாவுடன் கைகோர்த்திருப்பதால் ரசிகர்களிடையே ஆவல் அதிகரித்திருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தில் கதாநாயகியாக சிதி இத்னானி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருப்பது, ரசிகர்களுக்கு ட்ரீட்டாக அமைந்திருக்கிறது.


Advertisement

Advertisement

Advertisement