• Jun 03 2023

மும்முரமாக நடந்த தயாரிப்பாளர் சங்கத் தேர்தல்... வெற்றி பெற்ற பிரபலம் யார் தெரியுமா... அடடே இத்தனை வாக்குகள் வித்தியாசமா..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் உள்ள பல்வேறு சங்கங்களில் முக்கியமான சங்கங்களில் ஒன்றாக காணப்படுவது தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம். இந்த சங்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் பிரமாண்டமாக நடத்தப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.

அந்தவகையில் நேற்றையதினம் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வாக்குப்பதிவு சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற்றது. இதில் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் என பிரபலங்களும் சென்று தங்களுடைய அதிகாரபூர்வ வாக்கினைப் பதிவு செய்திருந்தனர். 


இதனையடுத்து இன்றையதினம் வாக்கு எண்ணும் நிகழ்வு நடைபெற்றது. இந்நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நலம் காக்கும் அணி சார்பில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட தேனாண்டாள் முரளி வெற்றி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 


அதாவது தலைவர் பதவிக்கு தன்னை எதிர்த்து போட்டியிட்ட டி.மன்னனை விட 150 வாக்குகள் அதிகமாக பெற்று தேனாண்டாள் முரளி வெற்றி பெற்றுள்ளார். அந்தவகையில் தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி 2-வது முறையாக தயாரிப்பாளர் சங்க தலைவராக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


அதுமட்டுமல்லாது தயாரிப்பாளர் சங்க பொருளாளராக முரளி அணியை சேர்ந்த சந்திரபிரகாஷ் ஜெயினும் வெற்றி பெற்று இருக்கின்றார். அத்தோடு இந்தத் தேர்தல் மூலம் 2 துணைத் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறாக தேர்தலில் வெற்றி பெற்ற அனைவருக்கும் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement