• Apr 20 2024

நடிகர் ஹரிஸ் கல்யாண் திருமணத்தில் தாலி எடுத்துக் கொடுக்கப் போகும் பிரபலம் யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிந்து சமவெளி என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் ஹரிஸ் கல்யாண். இவர் இதனைத் தொடர்ந்து வில் அம்பு, பியார் பிரேமா காதல் ,இஸ்பேட் ராஜாவும் இதயராணியும், ஓ மனமே போன்ற பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.

இது தவிர இவரின் கைவசம் ஸ்டார் டீசல் போன்ற பல திரைப்படங்கள் உருவாகி வருகின்றது. இவை இரண்டும் விரைவில் வெளி வரக் காத்திருக்கின்றன. மேலும் இவர் பிரபல்யமடைந்ததற்கு முக்கிய காரணமாக இருந்தது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இதன் மூலம் ஏராளமான ரசிகர்களையும் கவர்ந்திருந்தார்.


சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் அண்மையில் தனக்கு நர்மதா என்ற பெண்ணுடன் திருமணம் நடக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் பத்திரிகையாளரை சந்தித்த இவர் தனது திருமணம் குறித்து சில விடயங்களை கூறி இருக்கின்றார்.அதாவது தனது திருமணம் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் என்றும் தனது திருமணத்திற்கு கமல் சேர் மற்றும் விஜய் சேருக்கு அறிவிப்பு விடுத்துள்ளதாகவும் தெரிவித்தார். இது தவிர தனது திருமணத்திற்கு யார் தாலி எடுத்துத் தரப் போவது என்று தனக்கே தெரியவில்லை. திருமண வீடியோ வெளியானதும் பாருங்கள் என்றும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement