• Mar 27 2023

சங்கமித்ராவை மீண்டும் தொடங்கும் சுந்தர்.சி...ஹீரோ யார் தெரியுமா..?

Aishu / 2 months ago

Advertisement

Listen News!

சுந்தர் சி தற்போது அரண்மனை படத்தின் நான்காம் பாகத்தை இயக்கி வருகிறார். அந்த படத்தில் விஜய் சேதுபதி தான் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இவ்வாறுஇருக்கையில் அவர் சில வருடங்களுக்கு முன்பு அறிவித்த சங்கமித்ரா படத்தை தற்போது எடுப்பதற்கான முயற்சியில் இறங்கி இருக்கிறாராம். 


அத்தோடு அந்த படத்தில் முதலில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா நடிக்க இருந்த நிலையில் தற்போது விஷால் மற்றும் ஆர்யா படத்தில் நடிக்க போவதாக தகவல் வந்திருக்கிறது.


சங்கமித்ரா படத்திற்காக 450 கோடி ருபாய் பட்ஜெட்டில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது.


இருப்பினும் இது பற்றி அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தால் தான் உறுதியாகும். அத்தோடு ஷூட்டிங் இந்த வருடம் அக்டோபரில் தொடங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. 


Advertisement

Advertisement

Advertisement