• Apr 01 2023

கதையையே மறந்திட்டாங்கப்பா.. பழனிச்சாமி யார் தெரியுமா.? இதைக் கவனித்தீர்களா..? 'பாக்கியலட்சுமி' சீரியலை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்..!

Prema / 4 weeks ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான ஹிட் சீரியல்களில் ஒன்று 'பாக்கியலட்சுமி'. இந்த சீரியலில் எதிர்பாராத விதமாக பல அதிரடித் திருப்பங்கள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கின்றன. அதாவது கோபி பாக்கியாவை பிரிந்து சென்று பாக்யாவுக்கு தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகளை கொடுத்து வர அதை எல்லாம் ஏற்று தனி ஆளாக போராடி வருகிறார் பாக்கியா.


இந்த நிலையில் நேற்றைய எபிசோட்டில் நடிகர் ரஞ்சித் நம்ம ஊரு பழனிச்சாமியாக இந்த சீரியலில் என்ட்ரி கொடுத்தார். இதைத்தான் ரசிகர்கள் பலரும் தற்போது பங்கமாக கலாய்த்து வருகின்றனர். அதற்கு காரணம் என்னவெனில், பாக்கியா தொடங்கிய ஈஸ்வரி கேட்டரிங் ஆரம்பத்தில் தொடங்கி வைத்தது நடிகர் ரஞ்சித் மற்றும் அவருடைய மனைவி பிரியா ராமன் தான். 


ஆனால் இவற்றை எல்லாம் மறந்த சீரியல் குழு தற்போது அவரை பழனிச்சாமி என்ற புதிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளது. இதை அவதானித்த ரசிகர்கள் இதனை ட்ரோல் செய்து வருகின்றனர். தாது "பாக்கியலட்சுமி சீரியல் கதையை நீங்க மறந்துட்டீங்களா? இல்லேன்னால் நடந்ததையெல்லாம் ரசிகர்கள் மறந்துவிடுவார்கள் என்று நினைத்தீர்களா?" என பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.


அதுமட்டுமல்லாது இனி இந்த சீரியலில் பாக்கியாவுக்கு ஜோடியாக பழனிச்சாமி தான் இருப்பார் எனவும் கூறி வருகின்றனர். அதற்கு காரணம் பாக்கியலட்சுமி சீரியலின் உடைய இந்தி வெர்ஷனில் கணவனை பிரியும் நாயகி இரண்டாவது திருமணம் செய்து கொள்வார். அதேபோல் தமிழில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலிலும் இப்படி நடந்தால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா என்பது கேள்விக்குறியாகவும் விவாதமாகவும் மாறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement