• Sep 25 2023

தனி ஒருவன் 2 திரைப்படத்தின வில்லனாக நடிக்கப்போவது யார் தெரியுமா?- அரவிந்த்சுவாமிக்கே டஃப் கொடுக்கும் நடிகராச்சே....

stella / 2 weeks ago

Advertisement

Listen News!

மோகன் ராஜா இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து, 2015-ம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ‘தனி ஒருவன்’. இப்படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார். இப்படத்தில் வில்லனாக அரவிந்த் சாமி நடித்திருந்தார்.தம்பி ராமையா, நாசர், ஹரிஷ் உத்தமன், கணேஷ் வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருந்தனர். 

ஹிப்ஹாப் ஆதி இசை அமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.இப்படம் வெளியாகி 8 ஆணடுகள் நிறைவடைந்திருந்த நிலையில் அண்மையில் இப்படத்தின் இரண்டாம் பாகம்உருவாகவுள்ளதாக அண்மையில் இயக்குநர் மோகன் ராஜா ப்ரோமோ வீடியோ வெளியிட்டிருந்தார்.


இப்படம் இயக்குனராக மோகன் ராஜாவிற்கு, நடிகர்களாக ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமிக்கும் மாஸ் கம் பேக் கொடுத்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துகொண்டு இருந்தனர்.

ஆனால், முதல் பாகத்தில் அரவிந்த் சாமி கதாபாத்திரம் இறந்துவிட்டதால், இரண்டாவது பாகத்தில் அவருக்கு நிகரான நடிப்பை யார் கொடுக்க போகிறார் என ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.இந்நிலையில், தனி ஒருவன் 2 படத்தில் வில்லனாக பகத் பாசில் நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.


இவர் கண்டிப்பாக அரவிந்த் சாமியின் நடிப்புக்கு நிகரான நடிப்பை கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகின்றது.


Advertisement

Advertisement

Advertisement