பல வருடங்களுக்கு பின் அம்மன் படத்தில் யார் நடிக்க உள்ளார் தெரியுமா !

259

மலையாளத்தில் முன்னனி நடிகையாக வலம் வந்தவர் கவுசல்யா.இவர் தமிழில் 30 இற்கு மேற்பட்ட படத்தில் நடித்தள்ளார்.இவர் பல படங்களில் இன்றும் நடித்து வருகின்றார். இவர் அதிக ரசிக பட்டாளத்தை கொண்டுள்ளார். முன்னைய காலங்களில் கதாநாயகியாக வலம் வந்த இவர் தற்போது தாய், அண்ணி என பல வேடத்தில் நடித்து வருகின்றார்.


இவர் பல விருகளையும் பெற்றுள்ளார்.இவர் தமிழில் மட்டும் அன்றி தெலுங்கு, மலையாளம், என பல மொமிகளிலும் நடித்தள்ளார்.இவர் காலமெல்லாம் காதல் வாழ்க என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமாகி தனக்கென ஓர் இடத்தை கொண்டு காணப்படுகின்றார்.


மற்றும் இவர் நேருக்கு நேர், சொல்லாமலே என்ற படத்தின் மூலம் இவருக்கு தமிழில் நடிப்பதற்கு அதிக வாய்ப்புக்கள் கிடைத்தது என்றும் கூறலாம். இந்த நிலையில் தமிழ் சினிமாவில் அம்மன் படங்களுக்கென்றே தனி சீசன் இருந்த காலம் உண்டு. கே.ஆர்.விஜயா, ரம்யா கிருஷ்ணன் போன்றவர்கள் அம்மன் வேடத்தில் நடித்தே புகழ்பெற்றார்கள். அம்மன் திருவிழா காலங்களில் அம்மன் படங்களை தியேட்டரில் மீண்டும், மீண்டும் வெளியிடுவார்கள். தொலைக்காட்சிகளில் பக்தி சீரியல்களின் வருகைக்கு பிறகு அம்மன் படங்கள் வெளிவரவில்லை எனவும் கூறலாம்.

இப்போது பல ஆண்டுகளுக்கு பிறகு உத்ரா என்ற பெயரில் அம்மன் படம் ஒன்று வருகிறது. இதில் இவர் அம்மனாக நடித்துள்ளார். இந்தப் படத்தை ரேகா மூவிஸ் எம்.சக்கரவர்த்தி தயாரித்துள்ளார். முற்றும் இப் படத்தை நவீன் கிருஷ்ணா இயக்கியுள்ளார். உத்ராவாக ரக்ஷா நடிக்கிறார். சாய்தேவ் இசை அமைக்கிறார், ரமேஷ் ஒளிப்பதிவு செய்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் உத்ரா படம் பற்றி இயக்குனர் நவீன் கிருஷ்ணா பின்வருமாறு தெரிவித்துள்ளார். அதாவது:வட்டப்பாறை என்ற கிராமத்திற்கு தங்கள் பாட திட்டத்துக்காக மூன்று கல்லூரி ஜோடிகள் செல்கிறார்கள். அந்த கிராமத்தில் மின்சாரம் இல்லை, சந்தோஷம் இல்லை, அவ்வளவு ஏன்? திருமணம் நடந்தே பல வருடங்கள் ஆகிறது.

அப்படியே, அந்த மண்ணில் மீறி திருமணம் நடந்தாலும் அந்த புது மண தம்பதி அன்றிரவே அரூபத்தால் மர்மமான முறையில் இறந்துவிடுவதாக நம்புகிறார்கள். இதன் பின்னணி என்ன என்பதை பக்தி கலந்து படம் விவரிக்கிறது. அடுத்த மாதம் 10ம் திகதி இப் படம் வெளி வரும் எனவும் தெரிவித்துள்ளார்.