சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.
பிரபல நடிகரின் மகளும் தனுஷின் முன்னாள் மனைவியுமாக இருப்பவர் தான் ஜஸ்வர்யா.
தனுஷும், ஐஸ்வர்யா ரஜினிகாந்தும் கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி தங்களின் பிரிவை சமூக வலைதளங்களில் அறிவித்தார்கள்.இது ரசிகர்களிடத்தே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அதாவது 18வருடம் இல்லற வாழக்ககையில் ஈடுபட்டு இரண்டு புதல்வர்களை பெற்று எடுத்த இருவரும் ஏன் பிரிகிறார்கள் என்ற கேள்வியே.
இதையடுத்து தனுஷையும், ஐஸ்வர்யாவையும் சேர்த்து வைக்க இரு வீட்டாரும், நண்பர்களும் முயற்சி செய்தார்கள். ஆனால் அவர்களின் முயற்சி தோல்வியிலையே முடிவடைந்தது.
இருந்தும் இவர்கள் இருவரும் தமது வேலைகளில் கவனம் எடுத்தாலும் தமது பிள்ளைகளுக்காக அடிக்கடி நேரம் ஒதுக்குவார்கள்.
இந்த நிலையில் தனது தந்தையுடனும் தனது மகன்களுடனும் தீபாவளி கொண்டாடிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இது இணையதளங்களில் வைரலாகி வருகிறது
Listen News!