• Mar 28 2024

துணிவு படத்தின் இயக்குநர் எச்.வினோத் விரும்பிப் பார்க்கும் டிவி ஷோ எது தெரியுமா?- அடடே இது சூப்பர் நிகழ்ச்சியாச்சே

stella / 1 year ago

Advertisement

Listen News!

வரும் 2023 பொங்கலுக்கு  வெளியாகவுள்ள திரைப்படம் தான் அஜித் நடிப்பில் உருவாகிள்ள துணிவு திரைப்படம்.இப்படத்தின்  தமிழக ரிலீஸ் உரிமத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. மேலும் இந்த படத்தின் ஒட்டுமொத்த வெளிநாட்டு உரிமத்தை லைக்கா நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய,   கலை இயக்குனராக மிலன் பணிபுரிய,  இந்த படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் பணிபுரிகிறார். எடிட்டராக விஜய் வேலுக்குட்டி பணிபுரிகிறார். சண்டை காட்சிகளை சுப்ரீம் சுந்தர் வடிவமைப்பு செய்கிறார்‌‌.


இந்த படத்தின் 3 சிங்கிள் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.நேற்றைய தினம் இப்படத்தில் நடிப்போர் குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இந்நிலையில்  துணிவு படத்தில் நடித்துள்ள பட்டிமன்ற பேச்சாளர் மோகன சுந்தரம் & குக் வித் கோமாளி தர்ஷன் ஆகியோர் பிரபல சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்திருந்தனர்.

அதில் துணிவு படம் குறித்த பல கேள்விகளுக்கு இருவரும் பதில் அளித்தனர். குறிப்பாக நடிகர் தர்ஷன், "இயக்குநர் வினோத்திடம் என்ன எப்படி துணிவு படத்திற்காக தேர்ந்தெடுத்தீங்க? என கேட்டேன். அதற்கு, "இல்ல தலைவரே நான் குக் வித் கோமாளி பார்ப்பேன். பாத்து உங்களை பிடிச்சு இருந்தது. சரி ஓகே கூப்பிட்டிரலாம் என்று கூப்பிட்டேன்" என இயக்குநர் H.வினோத்" கூறியதாக தர்ஷன் பேட்டியில் கூறியுள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement