பிரவுதேவா நடிக்கும் புதிய படம் எந்த கதையை மையமாகக் கொண்டுள்ளது தெரியுமா!

130

தென்னிந்திய சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் பிரபுதேவா. இவர் இயக்குனராகவும் கடைமையாற்றி வருகின்றார்.அது மட்டும் இன்றி இவர் தனது நடனத்தால் அதிக ரசிகர்களை தன் வசம் கொண்டுள்ளார். இவர் இயற்றிய எங்கேயும் காதல் என்ற படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைக் கொண்டு காணப்பட்டது. இவர் பல முன்னனி நடிகைகளுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவரை ரசிகர்கள் நடனப் புயல் என்று அழைக்கின்றது. இவர் 60 இற்கு மேற்பட்ட படங்களில் நடினம் ஆடியுள்ளார்.
இவர் தேவி 2 படத்தை தொடர்ந்து தற்போது கதாநாயகனாக சில படங்களில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில் இவர் இயக்குனர் பணியை சற்று ஒதிக்கி வைத்து விட்டு ஹீரோவாக தன்னை தேடி வரும் வாய்ப்புக்களை கெட்டியாக பிடித்துக் கொண்டு தனது பார்வையை நடிப்பு பக்கம் திருப்பியுள்ளார். அந்த வகையில் சமீபத்தில் அவரது பொன்மாணிக்க வேல் படம் வெளியாகி உள்ளது.

அது மட்டும் இன்றி இவர் அடுத்தடுத்து தேள், பகீரா , என்ற படங்களில் நடித்து வருகின்றார். ஆனால் இப் படம் எல்லாம் கமர்சியல் அம்சம் கொண்ட படங்கள் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

மேலும் இதிலிருந்து சற்று மாறுபட்ட அதாவது எழுபதுகளில் வெளியான அழியாத கோலங்கள் பாணியில் ஒரு கதையில் இவர் நடிக்க இருக்கின்றார்.


ரெஜினா கதாநாயகியாக நடிக்க, தெலுங்கு நடிகை அனசுயா பரத்வாஜ் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றார்.
இதில் இவர் எழுத்தாளர் ஆகவும், ரெஜினா ஆசிரியையாகவும் நடித்து வருகின்றனர்.

இப் படம் பள்ளிக்கால வாழ்க்கையை குறிப்பாக மாணவ பருவத்தில் இருபாலருக்கும் இடையே ஏற்படும் இனக்கவர்ச்சி பற்றியும், வயது கூடியவர்கள் மேல் ஏற்படும் ஈர்ப்பு பற்றியும் காதல் கலக்காமல் இந்தப் படத்தில் வெளிப்படுத்த உள்ளனர் என்றும் தகவல்களை படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


இப் படத்தை கொரில்லா படத்தை இயற்றிய டான் சாண்டி இயற்றி வருகின்றார். இப் படம் செம கிட்டாகும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.