• Apr 20 2024

நடிகர் சிவகார்த்திகேயனின் படங்களில் சென்னையில் அதிகம் வசூலித்த படம் எது தெரியுமா?- டான் இல்லையாம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் மக்களால் கொண்டாடப்படும் நடிகராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். சமீபகாலமாக இவர் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் வசூலில் அள்ளிக் குவிப்பதோடு சூப்பர் ஹிட் வெற்றியும் பெறுகின்றன. இதனால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது ரசிகர்களிடையே அதிகரித்துக் காணப்படுகின்றது.

அத்தோடு இவர் மக்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுத் தர வேண்டும் என்ற நோக்கில் படங்களைத் தெரிந்தெடுத்து நடத்தி வருகின்றார். அந்த வகையில் கடந்த வருடம் டாக்டர், இந்த வருடம் டான் என அடுத்தடுத்து வெற்றிப் படங்களாக கொடுத்து வருகிறார்.

டான் திரைப்படம் 12 நாள் முடிவிலேயே உலகம் முழுவதும் ரூ. 100 கோடி வசூலை எட்டிவிட்டது. அடுத்து சிவகார்த்திகேயன் என்ன படம் நடிக்கப்போகிறார், எப்படி இருக்கும் என எதிர்ப்பார்ப்பு இப்போதே மக்களுக்கு வந்துவிட்டது.

சிவகார்த்திகேயனின் டான் திரைப்படம் இப்போது வரை சென்னையில் ரூ. 6 கோடிக்கு மேல் வசூலித்திருக்கிறது. இன்னும் அதிகம் வசூல் செய்யும் என்கின்றனர்.

இந்த படத்தை தாண்டி சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த வேலைக்காரன் படம் தான் சென்னையில் அதிகம் வசூலித்த படம் என்று கூறப்படுகிறது. படம் ரூ. 8.9 கோடி வரை வசூலித்திருந்ததாம் என்று தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement