• Apr 19 2024

பிக்பாஸ் சீசன் 6 இல் ஆறாம் வாரத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஹவுஸ்மேட் யார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த மாதத்திற்கு முன், துவங்கப்பட்ட பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மேலும் ஒற்றுமையாக இருக்கும் போட்டியாளர்கள் டாஸ்க் என்று வந்து விட்டால் மாத்திரம் ஒருவருக்கொருவர் மோதிக் கொள்கின்றனர்.

அதிலும் கடந்த வாரம் அநியாயமான முறையில் விளையாடிய தனலக்ஷ்மி டீமை கமல்ஹாசன் கண்டித்தார். மேலும் இந்த வாரம் நாமினேஷனில் ராபேட் மாஸ்டர், ஜனனி, நிவாஷினி, தனலட்சுமி, அசீம், ஆயிஷா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.


இது ஒரு புறம் இருக்க பிக்பாஸ் வீட்டின் இந்த வாரத் தலைவருக்கான டாஸ்க் நடைபெற்றது. அதில் அமுதவாணன் மணிகண்டன் ரச்சிதா விக்ரமன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் மணிகண்டன் வெற்றி பெற்று இந்த வாரத் தலைவர் ஆனார்.

மேலும் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டை விட்டு யார் வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. அநேகமாக தனலக்ஷ்மி வெளியேறவாய்ப்புள்ளதாக கூறப்பட்டும் வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement

Advertisement