• Feb 02 2023

துணிவு மற்றும் வாரிசு படங்கள் தமிழகத்தில் இதுவரை செய்துள்ள வசூல்- முதலிடத்தில் இருப்பது எந்த படம் தெரியுமா?

Listen News!
stella / 1 week ago
image

Advertisement

Listen News!


நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும், அஜித் நடித்த துணிவு திரைப்படமும் கடந்த ஜனவரி 11-ந் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி ரிலீஸ் ஆனது. இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால், பாக்ஸ் ஆபிஸில் இரு படங்களும் வசூலை வாரிக் குவித்து வருகின்றன. இதனால் படக்குழுவினரும், தயாரிப்பாளர்களும் உற்சாகம் அடைந்துள்ளனர்.

துணிவு ஆக்‌ஷன் திரைப்படமாக எடுக்கப்பட்டு இருந்ததால் இப்படத்திற்கு இளைஞர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. மறுபுறம் வாரிசு திரைப்படம் குடும்ப உறவுகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு இருப்பதால் இப்படத்தை பேமிலி ஆடியன்ஸ் மிகப்பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். இதனால் இப்படம்  வசூலில் லீடிங்கில் உள்ளது.


எல்லா மொழிகளிலும் படத்திற்கு நல்ல கலெக்ஷன் தான் வந்துகொண்டிருக்கிறது.தற்போது தமிழகத்தில் துணிவு ரூ. 114 கோடியும், வாரிசு ரூ. 115 கோடியும் வசூலித்துள்ளதாம்.வரும் நாட்களிலும் பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் இல்ல என்பதால் இந்த படங்களின் வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.

மேலும் நடிகர விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் அஜித் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement