• Apr 25 2024

பாலாவை ரிஜெக்ட் செய்த சூர்யா எந்த இயக்குநருடன் கூட்டணி அமைக்கவுள்ளார் தெரியுமா?- செம குஷியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறந்த படங்களைத் தேர்ந்தெடுத்து நடிப்பதன் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்து நிற்பவர் தான் நடிகர் சூர்யா.எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.

இது வரலாற்றுப் படம் என்பதால் சூர்யா அதில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகின்றார்.அதில் சூர்யா சிக்ஸ் பேக் வைத்து நடிக்க போகிறார் என்றும் தற்போது தகவல் வந்திருக்கிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர்.


இதுதவிர  பாலா உடன் சூர்யா கூட்டணி சேர்ந்து வணங்கான் என்னும் திரைப்படத்தில் நடித்து வந்தார். இப்படத்தின் முதற்கட்டப்படப்பிடிப்பானது கன்னியாகுமாரியில் இடம்பெற்றது. இருப்பினும் அண்மையில் சூர்யா அப்படத்திலிருந்து விலகினார்.

சூர்யாவுக்கு அந்த கதை செட் ஆகாது என பாலா அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதனால் சூர்யா அடுத்ததாக யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் காணப்பட்டது.அதன்படி இயக்குநர் ஹரியுடன் கூட்டணி அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் சூர்யா ஹரி உடன் கூட்டணி சேர இருந்த அருவா படம் ட்ராப் ஆனது எல்லோருக்கும் நினைவிருக்கும். தற்போது சூர்யா அந்த ப்ரொஜெக்ட்டை தான் சூர்யா  கையில் எடுக்க இருக்கிறார் என தகவல் பரவி வருகிறது.சூர்யாவின் கெரியரில் பல வெற்றி படங்கள் கொடுத்த ஹரி உடன் மீண்டும் அவர் இணைய இருக்கும் செய்தி ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 

Advertisement

Advertisement

Advertisement