• Mar 28 2023

சூப்பர் ஸ்டார் மஹாசிவராத்திரிக்கு தனது சகோதரனுடன் எங்கு போனாரு தெரியுமா?வைரலாகும் புகைப்படம்!

Jo / 1 month ago

Advertisement

Listen News!

மஹாசிவராத்திரி நாளினை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய சகோதரர் சத்யநாராயணனுடன் கர்நாடகா மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டத்தில் உள்ள ஆதியோகி மையத்திற்கு சென்று வழிபட்டுள்ளார். 

கோயம்புத்தூர், ஈஷா யோகா மையம் சார்பில், ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கர்நாடக மாநிலம் சிக்கபல்லபுரா மாவட்டத்தில் உள்ள நந்தி மலை அடிவாரத்தில், சுமார் 112 அடி உயரம் கொண்ட ஆதியோகி சிலை மக்கள் வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது. கோவையில் உள்ள சிவன் சிலை போலவே இங்கும், சிலை உள்ளதால்... தினம் தோறும் ஆயிரக்கனமான பொதுமக்கள் இங்கும் வந்து சிவனை வழிபட்டு வருகினறனர்.

இந்நிலையில் மஹாசிவராத்திரியை முன்னிட்டு, கோவையை அடுத்து பெங்களூருவில் அமைத்துள்ள 112 அடி உயர ஆதியோகி சிலைக்கும் சிறப்பு வழிபாடுகள் விடிய விடிய நடந்தது. இதை எண்ணற்ற பிரபலங்கள் பலர் கலந்து கொண்ட நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் திடீர் என போய்யிருக்காரு.

தன்னுடைய சகோதரர் சத்யநாராயணனுடன் ரஜினிகாந்த் காரில், இந்த மையத்திற்கு வந்த போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 



Advertisement

Advertisement

Advertisement