நடிகை நயன்தாரா திருமணத்திற்குப் பிறகு எங்கே இருக்கப் போகின்றார் தெரியுமா?- இங்கு தானே ரஜினிகாந்தும் இருக்கின்றார்

1330

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தோடு சிறந்த நடிகையாக வலம் வருபவர் நடிகை நயன்தாரா . இவர் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்துப் பிரபல்யமானவர். மேலும் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்த இவர் தற்பொழுது கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாப்பாத்திரங்களில் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் தற்பொழுது அவரது காதலன் விக்னேஷ் சிவன் இயக்கும் காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இந்தப்படத்தில் இவருடன் விஜய்சேதுபதி மற்றும் சமந்தாவும் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்புக்களும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

தனது படங்களை முடித்த பின் நயன்தாரா தனது காதலனான விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொள்வார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இவர் தற்போது எழும்பூரில் உள்ள பிளாட்டில் வசித்து வருகிறார், அத்தோடு போயஸ் கார்டனில் எழும்பி வரும் பிரமாண்ட அபார்ட்மென்டில் இரண்டு பிளாட்-யை புக் செய்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது இந்த அபார்ட்மென்டின் வேலைகள் முடிவுறும் நிலையில் இருக்கின்றதாம். இதனால் அவரின் கல்யாணத்திற்கு பின் குடியேற அந்த வீடு தயாராகிவிடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நடிகை நயந்தாராவும் சென்னையில் நடிகர் ரஜினிகாந்த், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரது வீடுகள் இருக்கும் போயஸ் கார்டன் ஏரியாவில் விரைவில் குடியேறவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.