அண்ணாத்த படத்தில் எஸ்பிபி பாடிய பாடல் எப்போது வெளிவருகின்றது தெரியுமா?- குஷியான ரசிகர்கள்

148

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத மாஸ் நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் நடிப்பில வெளியாகிய பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றுள்ளதோடு வசூல் சாதனையும் புரிந்துள்ளது. அத்தோடு இவருக்கென்று ஏராளமான ரசிகர் பட்டாளம் இருப்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

அந்த வகையில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படம் அண்ணாத்த. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், மீனா உள்ளிட்டோர் நடித்துள்ள நிலையில் டி.இமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் இப்படத்தில் அறிமுக பாடலை மறைந்த பாடகர் எஸ்பிபி பாடிய இருந்தார் என்ற தகவல் ஏற்கனவே தெரிந்ததே

இந்த நிலையில் அண்ணாத்த படத்தில் எஸ்பிபி பாடிய இந்த பாடல் செப்டம்பர் 25-ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக இதுகுறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் 25-ஆம் தேதி தான் எஸ்பிபி காலமானார் என்பதால் அவரது ஒரு ஆண்டு நினைவு தினத்தை அடுத்து அவரது கடைசி பாடலை வெளியிட படக்குழு திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது

மேலும் அண்ணாத்த திரைப்படம் வரும் தீபாவளி அன்று ரிலீஸ் ஆவது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தொடர்ச்சியாக இனி புரமோஷன் பணிகளையும் தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது