• Apr 24 2024

வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது சிங்கிள் எப்போது ரிலீஸ் தெரியுமா? வெளியானது தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் திரைப்படம் தான் 'வாரிசு'.தில் ராஜு தயாரிக்கும் இப்படம் எமோஷனல், ஆக்‌ஷன், ரொமான்ஸ் என அனைத்தும் கலந்துக் கட்டி உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது. 

இதில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார்.இவர்களுடன் பிரகாஷ் ராஜ், பிரபு, சரத்குமார், கணேஷ் வெங்கட்ராமன், ஷாம், குஷ்பு, சங்கீதா, யோகி பாபு, சம்யுக்தா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.



வாரிசு படத்தின் மூலம் விஜய் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் தமன். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கும் வாரிசு திரைப்படத்துடன், அஜித்தின் துணிவு திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

இதனால் ஒட்டுமொத்த திரையுலகமும் அந்த இரண்டு திரைப்படங்களை எதிர்பார்த்து இருக்கின்றது. எனினும் ஏற்கனவே வாரிசு திரைப்படத்தில் இருந்து வெளியான ரஞ்சிதமே பாடல் செவ வைரல் ஹிட்டாகி இருக்கிறது. யூடியூப்-ல் தற்போது வரை 60 மில்லியன் பார்வைகளுக்கு மேல் அப்பாடல் குவித்து இருக்கிறது.



இவ்வாறுஇருக்கையில்  தற்போது வாரிசு திரைப்படம் இரண்டாவது சிங்கிள் பாடல் டிசம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என தகவல் வெளியாகியிருக்கிறது. அதனை தொடர்ந்து டிசம்பர் 24 ஆம் தேதி இப்படத்தின் இசைவெளியிட்டு விழா நடக்கும் என கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement