தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முக்கிய நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தமிழில் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். இவருக்கென்று உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர்.
அந்த வகையில் இவரது நடிப்பில் உருவாகியுள்ள முக்கிய திரைப்படம் தான் ’தி கிரே மேன்’.இப்படத்தில் ஆங்கில நட்சத்திரங்கள் மூவர் தனுஷுடன் இணைந்து நடிக்கின்றனர்.அத்தோடு இப்படத்தில் தனுஷ் நடித்து வரும் கதாபாத்திரம் குறித்த விபரங்களை எழுத்தாளர் மார்க் கிரேனி தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, இந்த படத்தில் ரயான் காஸ்லிங், கோர்ட் ஜென்ட்ரி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவரை கொலை செய்ய நினைக்கும் குழுவின் தலைவனாக தனுஷ் நடிக்கிறார் என்று அவர் கூறியுள்ளார். சமீபத்தில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டது. ஜூன் 22 ஆம் தேதி அந்த திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் படத்தில் தனுஷின் கதாபாத்திரம் தொடர்பான ஸ்டைலான புகைப்படமும் வெளியானது. இந்நிலையில் இந்த படத்துக்காக தனி எமோஜியை தற்போது டிவிட்டர் வெளியிட்டுள்ளது. இது சம்மந்தமான அறிவிப்பு தற்போது பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் படத்தின் புதிய போஸ்டர்கள் இப்போது இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த போஸ்டரில் படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கும் கலைஞர்களின் கதாபாத்திர அறிமுகம் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Listen News!