• Apr 19 2024

துணிவு படத்தின் முதல் பாடல் எப்போது வெளியாகிறது தெரியுமா..? வெளியானது தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து எச். வினோத் மற்றும் போனிகபூருடன் இணைந்து அஜித் மூன்றாவது முறையாக நடித்து வரும் திரைப்படம் தான் துணிவு.இந்த படத்தில் மஞ்சு வாரியர், ஜான் கோக்கன், சிபி சக்கரவர்த்தி, அமீர், பாவ்னி உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.

ஜிப்ரான் இசையமைப்பில் இப்படம் உருவாகி வருகின்றது.வங்கி கொள்ளையை மையமாக வைத்து க்ரைம் ஆக்சன் த்ரில்லர் ஜானரில் துணிவு திரைப்படம் வெளியாகவுள்ளது. தற்போது படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. 

பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் முதல் பாடல் 'சில்லா சில்லா' கடந்த வாரம் வெளியாகுமென கூறப்பட்டது. ஆனால் சில இறுதி மிக்சிங் காரணமாக இப்பாடல் வெளியாகவில்லை என்று தகவல் தெரிவிக்கின்றனர்.


இவ்வாறுஇருக்கையில், ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் துணிவு படத்தின் முதல் பாடல் வருகிற 9ஆம் தேதி வெளியாக அதிக வாய்ப்புகள் உள்ளது. அதற்கான அறிவிப்பு இன்று மாலை வெளியாகும் என தெரியவந்துள்ளது.

ஒரு வேலை அந்த தேதியில் வெளிவரவில்லை என்றால், கண்டிப்பாக அடுத்த வாரம் இப்படத்தின் முதல் பாடல் வெளியாகுமென நம்ம தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement