• Apr 19 2024

கமலின் அடுத்த படப்பிடிப்பு எப்போது ஆரம்பம் தெரியுமா..? இயக்குநர் இவர் தானாம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் தயாரித்து நடித்திருக்கும் திரைப்படம் விக்ரம். இந்த திரைப்படம் கடந்த 3 ஆம் திகதி வெளியாகி நல்ல வசூல் வேட்டையை கிளப்பி வருகின்றது.

மேலும் கமலுக்கு ஒரு கம்பேக் கொடுத்துள்ள படமாக இயக்கியுள்ளார் லோகேஷ். இதைத்தொடர்ந்து விக்ரம் 3 படம் உருவானால் அதையும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்குவார் என்று கமல் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது தெரிவித்துள்ளார்.

அதேசமயம் கமல் அடுத்ததாக நடிக்கவுள்ள படம் குறித்து ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு நிலவி வந்தது. எனினும் இந்த நிலையில் எடிட்டராக இருந்து இயக்குனராக மாறிய மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படத்தில் தான் நடிக்க இருப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் கமல்.

மேலும் இந்த படத்திற்கு தானே ஸ்கிரிப்ட்டும் எழுதியுள்ளார் கமல். விஸ்வரூபம் முதல், இரண்டாம் பாகங்களுக்கு எடிட்டராக பணியாற்றியவர் இந்த மகேஷ் நாராயணன்.

அதைத் தொடர்ந்து மலையாளத்தில் டேக் ஆப், சி யூ சூன், மாலிக் என பகத் பாசில் நடித்த படங்களாக தொடர்ந்து இயக்கி அங்கே வரவேற்பை பெற்றார் மகேஷ் நாராயணன். இந்த நிலையில்தான் மகேஷ் நாராயணனை தமிழில் இயக்குநராக அறிமுகப்படுத்துகிறார் கமல். ஜூலை இறுதியில் அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார் கமல்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement