• Apr 20 2024

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது தெரியுமா? அதிர போகும் விஜய்யின் ஸ்பீச்

lathushan / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தமிழ்த் திரைப்பட நடிகர் ஆவார். மேலும் இவர் தொடக்கத்தில் தனது தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். மேலும் இவர் 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார்.


மேலும் இவர் தமிழ்த் திரைப்படத் துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். மேலும்  விஜயின் ரசிகர்கள் இவரை "தளபதி" என்று அழைக்கிறார்கள். மேலும் இவருக்கு உலகம் முழுவதும் அதிகளவான ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள்.


தற்போது விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வாரிசு. மேலும் இப் படம் வரும் பொங்கல் பண்டிகையை அன்று வெளியாக இருக்கிறது.தற்போது வாரிசு புதிய புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகியிருக்கிறது. 


அண்மையில் இப்படத்தின் முதல் பாடல் ' ரஞ்சிதமே' வெளிவந்தது. ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இப்பாடல் தொடர்ந்து பல சாதனைகளை புரிந்து வருகிறது.


இந்நிலையில், பிரமாண்டமாக நடக்கவிருக்கும் வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த மாதம் டிசம்பர் 24ஆம் தேதி சென்னையில் உள்ள நேரு அரங்கத்தில் நடக்கிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.


மாஸ்டர் படத்திற்கு பிறகு நடிகர் விஜய்யின் ஸ்பீச்சை மேடையில் காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement