Thursday, June 30, 2022

பிரபல ஓடிடியில் வெளியாகும் டான்…எப்போது தெரியுமா..?

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த மே 13ஆம் திகதி வெளியாகியுள்ள திரைப்படம் தான் டான். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இத்திரைப்படம் வெளியாகியது.

இப்படத்தை சிபி சக்கரவர்த்தி இயக்க இப் படத்திற்கு இசையமைத்துள்ளார் அனிருத்.அத்தோடு இதில் எஸ்.ஜே. சூர்யா ,சமுத்திரக்கனி, பிரியங்கா மோகன் ,குக்வித்கோமாளி சிவாங்கி என பலரும் நடித்து அசத்தி உள்ளார்கள்.

லைக்கா நிறுவனம் மற்றும் சிவகார்த்திகேயனின் எஸ்கே பிரொடக்ஷன்ஸ் நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரித்து இருந்தது.

மேலும் இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரகனி, சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். அத்தோடு இந்த படம் வெளியாகி இரண்டே வாரத்தில் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்துள்ளது.முன்னணி நடிகர்களின் படங்களுக்கு சமமாக டான் திரைப்படம் வசூலிப்பது படக்குழுவினரை உற்சாகமடைய செய்துள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. எனினும் அதன்படி இப்படம்வரும் ஜூன் 10-ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடித்தளத்தில் வெளியாகவுள்ளது. மேலும் திரையரங்கில் வசூல் சாதனை படைத்து வரும் இந்த படம் ஓடிடியிலும் வெளியாவது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.


பிறசெய்திகள்
:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்