• Sep 26 2023

biggboss-season-7 எப்போது ஆரம்பம் தெரியுமா?- தொடக்க தேதியும் அறிவிச்சாச்சு- வாவ்..... இது தானே சூப்பர் அப்டேட்

stella / 1 month ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரை 6 சீசன்கள் முடிவடைந்துள்ள நிலையில் 7வது சீசன் எப்போது ஆரம்பமாகும் என ரசிகர்கள் அனைவரம் ஆவலாகக் காத்திருந்தனர்.இது குறித்த அறிவிப்புக்கள் அவ்வபோது வெளியாகி வருகிறது. மேலும் இந்த முறை, பலரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் என கூறப்பட்டது.

அதன்படி ஏற்கனவே, இந்த முறை இரண்டு பிக்பாஸ் வீடுகள் அமைக்கப்பட்டு, போட்டி நடைபெறும் என சில தகவல்கள் வெளியான நிலையில் இதனை தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ உறுதி செய்துள்ளது.  டபுள் ஆக்ஷனில் நடிகர் கமல்ஹாசன் தோன்றியுள்ள புதிய ப்ரோமோவை சற்று முன்னர் விஜய் டிவி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. 


 இந்த முறை 100 நாட்கள், 20 போட்டியாளர்கள், 60 கேமராக்கள், போன்ற விஷயங்கள் பழசாக இருந்தாலும், பிக்பாஸ் வீடு இரண்டாக மாறி உள்ளதாக கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதனால் ஷோ எப்பிடி இருக்கப் போகின்றது என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கின்றனர்.

இப்படியான நிலையில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பிக்பாஸ் நிகழ்ச்சியானது அக்டோபர் மாதம் 2ம் தேதி அல்லது 8ம் தேதி ஆரம்பமாகலாம் என்று கூறப்படுகின்றது. இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement