விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவருகிறது. இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளன. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் தொடர் மிகப்பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னணி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்களின் பார்வை மொத்தமும் நிகழ்ச்சி போட்டியாளர்களின் தேர்வு பட்டியலின் பக்கம் சென்றது.
முதல் சீசனில் ஆரவ் கோப்பையை வென்றார், அதே சமயம் ரித்விகா இரண்டாவது சீசனில் பாடகர் மற்றும் நடிகர் முகன் ராவ் மூன்றாவது சீசனையும், நடிகர்கள் ஆரி அர்ஜுனா மற்றும் ராஜு ஜெயமோகன் நான்காவது மற்றும் ஐந்தாவது சீசனில் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.
இந்நிலையில் 50 லட்சம் ரூபாய் பணப் பரிசுடன் பிக் பாஸ் தமிழ் 6-வது சீசனை வென்றார் அசீம். அந்த சீசனில் விக்ரமன் மற்றும் ஷிவின் இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்தனர்.
இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் 7 வது சீசன் தொடங்கப்பட உள்ளது. அதற்கான ப்ரமோ வேலைகள் தீவிரமாக நடந்து வருகின்றனது. அத்தோடு இந்த முறை இரண்டு வீடு என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு காணப்படுகின்றது. இப்படியான நிலையில் ஒரு ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதில் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியானது அக்டோபர் மாதம் 1ம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் செம குஷியில் இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!