நடிகர் கார்த்திக்கின் மகனுக்கு திருமணம் எப்போது தெரியுமா..? கௌதமே கூறிய தகவல்..!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகியிருந்தாலும் தமக்கென்று ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்து வரும் பல நடிகர்கள் இருக்கின்றனர். இவ்வாறு நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் என்ற அடையாளத்துடன் கடல் என்னும் திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகமானார் கெளதம் கார்த்திக்.

இப்படத்தினை பிரமாண்ட இயக்குநர் இயக்கியிருந்ததோடு இசையமைப்பாளரான AR ரஹ்மான் இசையமைத்திருந்தாலும் எதிர்பார்த்த அளவு இத்திரைப்படம் வெற்றி பெறவில்லை. இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ரங்கூன் திரைப்படம் நல்லதொரு அடையாளத்தை இவருக்கு ஏற்படுத்திக் கொடுத்தது.

அத்தோடு தற்பொழுது நடிகர் சிம்புவுடன் இணைந்து பத்து தல படத்தில் நடித்து வருகிறார். அடுத்து 1947 போன்ற படங்கள் அவரது நடிப்பில் வெளியாக உள்ளது.

இவ்வாறுஇருக்கையில் அண்மையில் கௌதம் கார்த்திக் இன்ஸ்டா பக்கத்தில் தனது ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு பதில் அளித்தார்.

மேலும் அதில் ஒருவர் திருமணம் எப்போது என கேட்ட விரைவில் நடக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.

தேவராட்டம் படத்தில் ஒன்றாக பணிபுரிந்த கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா இருவருக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக இதற்கு முன்பு சில தகவல்கள் வந்தது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

RELATED ARTICLES

spot_img
spot_img

அதிகம் படித்தவை

திரை விமர்சனம்