• Apr 18 2024

காதல் மனைவி நயன்தாரா நடிப்பில் உருவாகிய கனெக்ட் படத்தை பார்த்த விக்னேஷ் சிவன் என்ன சொன்னார் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

மாயா, கேம் ஓவர் போன்ற படங்கயை இயக்கு இயக்குநராக அறிமுகமாகியவர் தான் இயக்குநர் அஸ்வின் சரவணன். அவர் இயக்கத்தில் நயன்தாரா நடித்து வந்த கனெக்ட் திரைப்படம் விரைவில் திரைக்கு வர காத்திருக்கிறது.

கடந்த 2015ம் ஆண்டு நயன்தாரா மற்றும் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன் நடித்த மாயா திரைப்படம் ரசிகர்களை நல்லாவே திகில் அடைய வைத்தது.இதனைத் தொடர்ந்து இவர்  எஸ்.ஜே. சூர்யாவை இறவாக்காலம் என்னும் படத்தை இயக்கி இருந்தார்.இப்படம் வெளியாகாமல் பல சிக்கலை சந்தித்தது.


பின்பு கடந்த 2019ம் ஆண்டு நடிகை டாப்ஸி நடித்த கேம் ஓவர் படத்தையும் பயங்கர மிரட்டலாக எடுத்து ரசிகர்களை சீட்டின் நுனிக்கே கொண்டு வந்தார் அடுத்ததாக சமந்தாவை வைத்து ஒரு பேய் படத்தை இயக்கப் போவதாக பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், அந்த படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் நயன்தாராவுடன் இணைந்து கனெக்ட் படத்தை இயக்கி உள்ளார் .

இந்நிலையில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு முழுதாக எடுத்து முடிக்கப்பட்ட கனெக்ட் படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கு அஸ்வின் போட்டுக் காட்டி உள்ளார். அதை பார்த்து அசந்து போன விக்னேஷ் சிவன் மிரட்டிஃபைட்.. என கமெண்ட் அடித்து கனெக்ட் படத்தையும் அதில் நடித்த சத்யராஜ், நயன்தாரா மற்றும் அனுபம் கெர்ரையும் இயக்குநர் அஸ்வினையும் வெகுவாக பாராட்டி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement