படத்தை புரமோஷன் செய்யும் விதமாக, டொவினோ தாமஸ் என்ன செய்து வருகின்றார் தெரியுமா !

74

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வருபவர் டொவினோ தாமஸ். இவர் தமிழ் , தெலுங்கு, கன்னடம், மலையாளம், கிந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வருகின்றார். அது மட்டும் இன்றி இவர் தமிழ் சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைக்கொண்டு காணப்படுகின்றார். இவர் பல ரசிகர்களைக் கொண்டுள்ளார். இவர் பல முன்னனி நடிகைகளுக்கு ஜோடியாகவும் நடித்துள்ளார். இவர் பொலிவூட் பக்கம் குதிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் மலையாள திரையுலகில் முதன்முறையாக சூப்பர்மேன் கதாபாத்திரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ள படம் ‘மின்னல் முரளி’.

மாரி 2 படத்தில் வில்லனாக நடித்த இவர். இந்தப்படத்தில் சூப்பர்மேன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கோதா படம் மூலம் அவரை கமர்ஷியல் ஹீரோவாக மாற்றிய பஷில் ஜோசப் தான் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் சூப்பர்மேன் கதை என்பதால் தென்னிந்திய மொழிகள் மற்றும் இந்தி என ஐந்து மொழிகளில் பான் இந்திய படமாக உருவாகியுள்ள இந்தப்படம் கிறிஸ்துமஸ்கு ரிலீஸாக உள்ளது என தகவல்கள் வெளியாகி உள்ளது.

அந்தவகையில் இவர் பாலிவுட்டில் தனது படத்தை புரமோஷன் செய்யும் விதாமாக பிரபலங்களை சந்தித்து ஆதரவு கேட்டு வருகிறார்.

சில தினங்களுக்கு முன் இவர் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் மற்றும் பாலிவுட் நடிகர் சல்மான்கானை நேரில் சந்தித்துள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த சந்திப்பு பற்றி இவர் பின்வருமாறு தெரிவித்தள்ளார். அதாவது,’எனது சினிமா பயணத்தை துவக்குவதற்கு முன்னரே உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் ஆர்வத்தை தூண்டியவர் நீங்கள் தான்.

ஆனால் நேரில் சந்தித்தபோது, இந்தியாவின் சூப்பர் ஸ்டார்களில் ஒருவராக இருக்கும் நீங்கள் எவ்வளவு எளிமையாக காட்சியளித்தீர்கள். அதனால் பணிவாக இருப்பதற்கும் கூட நீங்கள் தான் உந்துதலாக இருக்கின்றீர்கள்’ எனக் கூறியுள்ளார்.